ராமர் பாதம்

ராமர் பாதம்

                     
 இயற்கை எழில்சூழ்ந்த இடத்தில் அழகிய மணல் மேட்டில் இக்கோவில் உள்ளது ராமேஸ்வரம் கோவிலுக்கு வரும் பலர் இக்கோவிலுக்கு தவறாமல் சென்று வருகின்றன இந்துக்கள் கடவுளாகவழிபடும் ராமனின் மனைவி சீதையை ,ராவணன் இலங்கைக்கு கடத்தி சென்ற பின் ராமபிரானும் ,லட்சுமணனும்,அனுமான் சேனைகளுடன் ,ராமேஸ்வரம் கெந்த மாதன பர்வதம் என்னும் இடத்தில் நின்று இலங்கை செல்ல கடலில் பாலம் அமைப்பது என ,ஆலோசனை செய்ததாக ராமாயண காவியத்தில் கூறப்பட்டுள்ளது .
                           

ராமர் நின்ற இடத்தில் அவரது இரு பாதத்தை வைத்து பூஜிக்க முடிவு செய்த விஜய நகர சாம்ராஜிய மன்னர்கள் 1480ஆம்ஆண்டுக்கு முன் ,ராமர் பாதம் கோவிலை உருவாக்கி தரிசனம் செய்தனர் ராமேஸ்வரத்தின் நிலமட்டத்தில் இருந்து 60மீ., உயரத்தில் ,மணல் மேட்டில் அமைந்துள்ள இக்கோவில் ,சுண்ணாம்புபவள பாறைகளால்  கட்டப்பட்டது.
                                                              
இராமேஸ்வரத்தில் 530 ஆண்டுகளாக கம்பிரரமாக காட்சியளிக்கும் ராமர் பாதம் கோவில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் நிர்வாகம் கட்டுபாட்டில் உள்ளது .

No comments:

Post a Comment